Skip to content

திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு இம்மாதம் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்குதல், கட்டாயம் தலைக்கவசம் அணிய இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வுபேரணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் போன்ற விழிப்புணர்வுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்  நடராஜன்,  சுரேஷ் பாபு ஆகியோர் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது… பயணிகள் பஸ்சில் பயணம் செல்லும் பொழுது ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ செய்யக்கூடாது. படிக்கட்டில் பயணம்

செய்வதை தவிர்க்க வேண்டும் .படிக்கட்டில் இருந்து செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் .ஓட்டுநருக்கு இடையூறாக பயணம் செய்யக்கூடாது தலை ,கை ,கால்களை வெளியே நீட்டக்கூடாது. இவை அனைத்தையும் பொதுமக்களாய் நாம் கடைபிடிக்க வேண்டும். சாலை உபயோகப்பாளர்கள் சாலையில் செல்லும் போது இருபுறமும் நன்கு கவனித்து சாலை கடக்க வேண்டும், வாகனம் செல்லும் சாலையை ஆக்கிமித்து செல்லாதீர். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் நடைமடையில் நடந்து செல்ல வேண்டும் வாகனங்களை போக்குவரத்துக் இடையூறாக நிறுத்தாதீர் .சாலையை கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். எனவே இது போன்ற சாலை விதிகளை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன் துணை மேலாளர்கள்  சுரேஷ் குமார்( வணிகம்)  சாமிநாதன்( தொழில்நுட்பம் )  ரவி பணியாளர் மற்றும் சட்டம்,  ராஜேந்திரன்(திருச்சி )மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!