Skip to content
Home » சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

சாலையில் டேரா போட்ட போதை ஆசாமிகள்….பஸ் டிரைவருக்கு முகத்தில் குத்து….

கோவை உக்கடம் அரசு போக்குவரத்துறை டிப்போவிற்கு உட்பட்ட 94 BCD என்ற எண் கொண்ட பேருந்து டவுன்ஹாலில் இருந்து குப்போபாளையம் செல்ல இன்று மாலை 3 மணியளவில் பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார்( 47) , நடத்துனர் காலிங்கராஜ் (45) இயங்கி உள்ளார். பேருந்து கலிக்கநாயக்கன்பாளையம் மதுபான கடை வலைவில் வந்து திரும்பி உள்ளது. அப்பொழுது சாலையின் குறுக்கே மூன்று வாலிபர்கள் நின்று உள்ளனர். பேருந்து செல்ல முடியாத நிலையில் ஓட்டுநர் ஒலி எழுப்பி உள்ளார். நடுரோட்டில் நின்று இருந்த போதை ஆசாமிகள் வானத்தை நிறுத்து நாங்கள் நிற்பது தெரியவில்லையா என்று தடித்த குரலில் பேசி ஓட்டுநரை பேருந்தில் இருந்து இறங்கி உள்ளனர்.மதுகடைககுள் இருந்து வெளியே வந்து போதை நண்பர்கள் ஓட்டுநர் விஜயகுமாரை கையில் அணிந்து இருந்த வலையத்தை கழற்றி வாய்‌, மூக்கு போன்ற இடங்களில் கெட்ட வார்த்தைகளை பேசிய படி முகத்தில் குத்து விட்டுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஓட்டுநரை பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து போதை ஆசாமிகளை விரட்டினர்.அடித்து விட்டு ஓடிய ஒருவரை மட்டும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பேருந்தில் ஏற்றி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஓப்படைத்தனர்‌. ஓட்டுநர் விஜயகுமார் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொண்டாமுத்தூர் போலீசார் பிடிபட்ட போதை ஆசாமியின் பெயர் சரண் என்பதும் அதே கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர்களை பிடி போலீசார் தேடித் வேட்டை நடத்தி வருகின்றனர். அவ்வழியே இயங்கிய மற்ற அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை நிறுத்தி விட்டு தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதனால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பட்டு பகலில் ஒலி எழுப்பியதற்காக அரசு பேருந்தை நிறுத்தி போதை ஆசாமிகள் ஓட்டுநரை இரத்தம் வரும் வரை தாக்கிய சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *