சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டம் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சாலையில் நடந்துசென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல் வௌியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜேசிபி மிஷின் மூலம் கட்டடத்தை அகற்றி அப்பெண்ணை மீட்டனர். கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்
மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு வாலிபர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.