போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் காயலான் கடைக்கு போக வேண்டிய நிலைமையில் உள்ளது இதில் பயணம் செய்யும் சாதாரண மக்கள் பாவம் என்றால், அதை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் அடிக்கடி ரிப்பேர் ஆகி நின்று விடுவதும் அதில் பயணம் செய்யும் பேருந்து பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு மாற்று பேருந்தில் செல்ல வைப்பதும் தொடர்கதையாகி வருகின்றன இந்நிலையில் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென்று நடுவழியில் நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்து நிலையம் இருந்ததால் அனைவரும் இறங்கி சென்று விட்ட நிலையில் முக்கிய சாலையில் பேருந்து நின்றதால் பேருந்து பின்புறம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்ல வேலையாக அங்கு ஒரு போராட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் ஒன்றிணைந்து பேருந்து அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளு தள்ளு தள்ளு என்று தள்ளிக்கொண்டே சென்றனர்.