திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனுர் பேரூராட்சி உட்பட்ட 12வது வார்டு பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தில் இருந்து இனாம் கல் பாளையம் எல்லையில் அமைந்துள்ள காருண்ய சிட்டி மற்றும் அக்சயா கார்டன் வரை சக்தி நகர் வழியாக செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளம் படுகுழியாக மிக மோசமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில். அந்த பகுதியில் இரவு நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் மிக சிரமத்திற்கு உள்ளாவதாக அப்பகுதி வாசிகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் 900 குடும்பங்கள் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதியான சாலை வசதியை ஏற்படுத்தி தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போஸ்ட் பெட்டியில் தபால் அனுப்பும் போராட்டம் பெண்கள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இந்த மண்ணச்சநல்லூர் சட்டமன்றம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்தி நகர் மக்களை சமயபுரம் பேரூராட்சி புறக்கணிப்பதால் குடி இருப்பு வாசிகள் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து எதிர்ப்பை தெரிவிப்போம் என சக்தி நகர் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.