திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் நொச்சியத்தை அடுத்த வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளியநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்ற ராமஜெயம் என்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாத்தலை
காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்தவர்களை ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து பேருந்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.