தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(21), ராராமுத்திரக்கோட்டை ேமாகன் என்பவரது மகன் யோகேஸ்வரன்(14), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலூர் கடைக்கு சென்று விட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது அதே திசையில் வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் வலதுபக்கம் மோதி இருவருக்கும் தலையில் பலத்த காயம் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.இறந்தவர்களின் உடல் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.