அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்ணங்குழி கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்ற இளைஞர். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஜெயங்கொண்டத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் உடையார்பாளையம் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் வண்டியை மறித்துள்ளனர்.
பின்னர் கத்தியால் குத்தி சட்டையில் இருந்த 2500 பணத்தை எடுத்து சென்றுள்ளனர். அவர்களின் வாகன எண்ணை குறிப்பிட்டு உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அஜய்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் உடையார்பாளையம் வினோத், நாயகனைப்பிரியாள் கிராமத்தில் கமரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.