Skip to content
Home » ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

  • by Authour

பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டனர். இந்த நிதி அறிக்கையில் முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. பாமகவின் நிழல் நிதி அறிக்கையின் சிறப்பம்சங்கள்:-

▪️ மே 1ம் தேதியிலிருந்து மதுவிலக்கு தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்; ▪️ ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ▪️ என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது. இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது. ▪️ பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்;

▪️ தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்றப்படும் ▪️ தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயிக்கும். ▪️ தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும்.

அதன் பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:- “தமிழகத்திலுள்ள கவர்னர், கவர்னரே இல்லை. தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு கையெழுத்திடாமல் உள்ளார். கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று உள்ளது. நினைவிடம் உள்ள இடத்திலேயே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடலில் சிலை அமைக்கக் கூடாது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *