தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சென்றடையும் அவர் ராமேசுவரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து உரையாடுகிறார். எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். Also Read – அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி: புதுகோட்டையை சேர்ந்த பட்டதாரி கைது பின்னர் 19-ந்தேதி (புதன்கிழமை) உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். மாலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…
- by Authour
