கேரள நடிகை ஒருவர் அளித்த நேர்காணலில் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இதற்கு நடிகர் ரியாஸ்கான் உடனடியாக பதிலளித்து தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த நடிகை யார் என்றே தெரியாது; என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. மேலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயார் என்றும் நடிகர் ரியாஸ்கான் பதிவிட்டுள்ளார்.
