தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் பயன்பாட்டில் இருந்த இக் குளம் தற் போது பயன்பாடில்லாமல், குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் குளத்தை ஆழமாகத் தூர் வாருவதுடன், படித் துறை அமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
