உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2012ல் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தல் விதியை மீறியதாக ரீட்டா பகுகுணா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் லக்னோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
. இவர் விதியை மீறியதாக வழக்கு தொடரப்பட்டபோது காங்கிரசில் இருந்தார். இப்போது அவர் கட்சி மாறி பாஜகவில் பி்ரக்யாராஜ் தொகுதி எம்.பியாக உள்ளார்.