Skip to content

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்..

  • by Authour

எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். கிளீனர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.20ஆயிரம் அபராதம் என்பதை திரும்ப பெற வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட LPG கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் உள்ளதால் தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் மாநிலங்கள் முழுவதும் 3-வது நாளாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!