இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்.
கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியை குவித்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் ஆட்சி அமைக்க 326 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால் தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கும் அதிகமான இடங்களில்ெ வற்றி பெற்றுவிட்டது.
இந்த நி்லையில் ஆட்சியை இழந்த இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கூறும்போது, கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். வெற்றி பெற்ற லேபர் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.