தஞ்சை மாவட்டத்தில் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ. 6 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இட்லி அரிசி கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இதேபோல் மணச்சநல்லூர் அரிசி தரம் வாரியாக கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையானது. இதே ோல் கர்நாடக பொன்னியானது தரம் வாயிலாக விலை உயர்ந்துள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கிலோ ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் பச்சரிசி தரம் வாரியாக கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையானது. பிரியாணி அரிசி ரூ.75-க்கு விற்கப்பட்டது. ஐ.ஆர்.20 அரிசி கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது.
இதேபோல் சீரக சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, வரகுஅரிசி, சாமை அரிசி என அனைத்து ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ.80க்கும், தூயமல்லி ரூ.80க்கும், வரகு ரூ.100க்கும், சாமை ரூ.110க்கும், தினை ரூ.110க்கும் விற்பனையானது. பாஸ்மதி அரிசி கடந்த 3 மாதங்களாகவே தரம் வாரியாக கிலோ ரூ.90 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் காய்கறிகள், அத்தியாவசிய ொருட்கள் விலை உயர்வு என்றால் இப்ோது அரிசியும் விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.