மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் 2வது பெரிய நகரமான நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
போட்டி நடந்து கொண்டிருந்தபோதே ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து வீரர்களை தாக்கினர். நடுவர்களையும் தாக்கினர். இதனால் எதிர் அணி ரசிகர்களும் மைதானத்திற்குள் இறங்கி மோதிக்கொண்டனர். இதனால் கலவரம் வெடித்தது.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கலவரத்துக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கினியா நாட்டு பிரதமர் அமடோ ஊரி பா உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் குவிந்துள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.