இந்திய அளவில் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சேகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளத.. இதன்படி நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக கர்நாடக மாநில கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ டி.கே.சிவகுமார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி. கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏக்கள் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ கே.எச்.புட்டசாமி கவுடாவுக்கு ரூ.1,267 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மற்றொரு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ.1,156 கோடி சொத்துகள் உள்ளன. நாட்டில் உள்ள பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மிகவும் ஏழையான எம்எல்ஏவாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் தாரா உள்ளார். அவருக்கு சொத்தாக ரூ.1,700 ரொக்கம் மட்டுமே உள்ளது. அவருக்குச் சொந்தமாக வீடு கூட இல்லை. அவருக்கு அடுத்தபடியாக ஒடிசா சுயேச்சை எம்எல்ஏ மகரந்த முதுலிக்கு சொந்தமாக ரூ.15,000 மட்டுமே உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவிடம் ரொக்கம் ரூ.18,370 மட்டுமே உள்ளது.