Skip to content
Home » ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜ விநாயகர் பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கும் வகையில் காட்சியளிக்கிறார். இவருடைய திருவுருவ சிலைக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு பல பிரபலங்கலும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பல பணக்காரர்களுக்கும் இங்குள்ள விநாயகர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். அதேபோல எந்த ஒரு புதிய ப்ராஜெக்ட் தொடங்குவதற்கு முன்பும் அம்பானி குடும்பமும் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை செய்த பின்னரே தொடங்குவார்களாம்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம், அம்பானி குடும்பம் லால்பாக்சா ராஜா குழுவின் பல்வேறு சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது, லால்பாக்சா குழு சமூகப் பணிக்கான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டது. அப்போது அனந்த் அம்பானி முன்முயற்சி எடுத்து குழுவுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவியை வழங்கினார். அனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் 24 டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கினர். அனந்த் அம்பானி இந்தக் குழுவின் நிர்வாக ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்த கோவில் இந்தியாவின் தலைநகரில் அதிகம் பார்வையிடப்படும் விநாயகர் கோவில் ஆகும். சாமானியர்கள், பிரபலங்கள், லட்சக்கணக்கான மும்பை வாசிகள் என ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரபலமான விக்கிரகத்தை பார்ப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும் இன்றைய தினம் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்காக இந்த கோவிலில் 10 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. மும்பை லால்பக்சா ராஜா விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. லால்பாக்சா ராஜ விநாயகரின் தரிசனத்தை கோவிலுக்கு செல்லாமல் அவர்களுடைய அதிகாரபூர்வ வலைதள பக்கங்கள் மூலம் பார்க்கலாம். அதன்படி “Lalbaugcha Raja” என்ற யூடியூப் சேனல் வழியாக தரிசிக்கலாம். மேலும் அவர்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களிலும் லால்பாக்சா ராஜ விநாயகரை தரிசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!