பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி, இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரை ஏற்றுகொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், முத்தரசியிடம் ரசாயனப்பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து அதனை வருவாய் ஆய்வாளர் இந்திராணிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அதன்படி நேற்று மாலை அலுவலகத்திற்கு சென்று வருவாய் ஆய்வாளர் இந்திராணிடம் ரூ.20ஆயிரம் லஞ்சமாக கொடுத்தபோது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா தலைமையிலான போலீசார் இந்திராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்திராணி கைது செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி அங்கயற்கண்ணி உத்தரவிட்டார்.