திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் , திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான எல்.ரெக்ஸ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் வக்கில் கோவிந்தராஜன் முன்மொழிய , ரெக்ஸ் பதவி ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலாராணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரன், முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாநில பொதுச்செயலாளர் ஜீ.கே.முரளிதரன், கே. ஆர்.ஆர்.ராஜலிங்கம், கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், எழில். சார்லஸ், மகிழம்பாடி செல்வராஜ், இளையராஜா, பட்டேல், பரிமள பிரபு, சுகுமார்,
இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, மகளிர் அணி ஷீலா செலஸ், சரவணன், ஜெயம் கோபி, அழகர், மலர் வெங்கடேசன், பாலு, யுவன், கிருஷ்ணா, செல்வா, செந்தில் குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி ,தியாகி சுந்தரனார், சையது இப்ராஹிம், விஜயலட்சுமி, பகதூர், சையத், மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ரெக்ஸ் தலைமையிலான நிர்வாகிகள் காமராஜர், மகாத்மா காந்தி, தியாகி அருணாச்சலம், இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, முன்னாள் எம்பி அடைக்கலராஜ் உள்ளிட்ட அனைவரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அருணாச்சலம் மன்றத்தில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.