திருச்சி மாநகராட்சி 39வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் ரெக்ஸ். இவர் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலின்படி பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் இவரை காங்கிரஸ் தலைவராக இன்று நியமித்துள்ளார். இவருக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் முன்னோடிகள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜவகர் இருந்தார். இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் நியமனம்…
- by Authour