Skip to content
Home » திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…

திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (65 ).இவர் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கடந்த நவம்பர் 16ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர் டி எச் எல் கொரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். மேலும் சீனாவுக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆதார் எண்ணில் பெரிய அளவு பண மோசடி நடந்துள்ளது. இதற்கு பெரிய தொகை அபராதம் செலுத்த வேண்டி வரும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் உங்கள் அபராத தொகையை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுத் தருகிறோம் என கூறினார் . அதைத் தொடர்ந்து தேவகி தனது வங்கி கணக்கு விவரங்களை மேற்கண்ட மோசடி பேர் வழிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் உங்களை கைது செய்யாமல் இருக்க உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளான் . அதை நம்பிய தேவகி தனது வங்கி கணக்கில் இருந்த ரூபாய் ஒரு கோடியே 61 லட்சம் பணத்தை அந்த மோசடி பேர் வழியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட தேவகி அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை அதைத் தொடர்ந்து தேவகி ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *