Skip to content

ரிட்டயர்டு கேஸ்கள் பாஜகவுக்கு போகிறார்கள்….. எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை மாவட்ட அதிமுக  ஆலோசணைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஆ.ராசா பேச்சிற்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. அதிமுக அரசு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது. திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை.
அதிமுக கட்சி, சின்னத்தை முடக்க பார்த்தார்கள். உலகில் மிகப்பெரிய கட்சி அதிமுக. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை. திமுகவினரே திமுக ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். அதிகமான எம்.பி.க்களை நாம் ஜெயிப்போம்.  பாஜகவில் புதிதாக யாரும் சேர்வதில்லை. வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் அக்கட்சிகளில் சேர்க்கின்றனர்.
அதிமுகவில் இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள். நமக்கு எதிரி திமுக தான். அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்முடன் போட்டி போடவே முடியாது.
நல்ல கூட்டணி வரும். அதிமுக கட்சியை பார்த்தே திமுக பயப்படுகிறது. தொண்டர்களை சோர்வடைய செய்ய அதிமுக உடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என பொய் செய்திகளை பரப்புகிறார்கள்/

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!