சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும்-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.