கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களை துரத்துவது, கடித்தும் அச்சுறுத்தும் வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு நல சங்கத்தினர் 15 – க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து உள்ளனர்.
இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம் சங்கத்தினருக்கு அந்த பகுதி ஒருவர் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில்
உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற விலங்கு நல வாரியத்தினர். இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்கு போராடிய நாய்களை மீட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
மேலும் சிகிச்சையில் பலன் இன்றி உயிருக்கு போராடிய நாய்கள் இறந்து விட்டது. பின்னர் இறந்த நாய்களின் உடலை உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.