கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100% ஒதுக்கீடு செய்ய வேண்டும்,பாமாயில், துவரம் பருப்பு வழங்குவதில் காலதாமதம் கூடாது, அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடையில் இறக்குவதற்கு இறக்கு கூலி கட்டாயம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஸ்டிரைக் நடக்கிறது.
வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தார். முடிவில் மாவட்ட செயலாளர் பொன்னர் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செல்வமணி, அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், சிவா, செல்வேந்திரன், ரமேஷ் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர் பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.இதனால் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.