புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது போது பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அறிவித்தது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஆக.30-ம் தேதிய நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்திலிருந்த 2000 நோட்டுகளில் 97.96 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் ரூ. 7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
