Skip to content
Home » குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

  • by Authour

தஞ்சை அருகே  உள்ள வல்லத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். 1082 மாணவிகள் படிக்கிறார்கள்.  தஞ்சையில் நடைபெறும் அரசு குடியரசு தின விழா கலைநிழ்ச்சிகளில் பங்கேற்க  வல்லம் அரசு மாதிரி பள்ளி மாணவிகள் 56 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள்  தஞ்சையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கும்மி, கரகம் காவடி, கோலாட்டம்  நர்டுப்புற நடனங்கள்  என பல கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.

இம்மாணவிகளுக்கு பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் மாலாராணி, ஆசிரியை கங்காபாகீரதி ஆகியோர்  பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களின் மேற்பார்வையில் மாணவிகள் பயிற்சி எடுத்து அதில் ஏற்படும் சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொ) செயலெட்சுமி கூறுகையில், குறைந்த நாட்களே உள்ள நிலையிலும்,

திருப்புதல் தேர்வு நடக்கும் நிலையிலும் எம் பள்ளி மாணவிகள் குடியரசு தினவிழாவில் தங்கள் திறமைகளை காட்டுவதற்காக முழு முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக நாட்டுப்புற நடனங்களான கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் என்று தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். வைரத்திற்கு பட்டை தீட்டுவது போல்தானே பயிற்சிகள் எடுப்பதால் திறமைகள் இன்னும் மெருகேறும். அந்த வகைகள் சிங்கப் பெண்களாக எம் பள்ளி மாணவிகள் நாட்டுப்புற நடனத்தில் கலக்குகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *