திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது வீட்டு வாடகை, காருக்கான பெட்ரோல், ஊழியர்களுக்கு சம்பளம் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள். ரபேல் வாட்சையும் கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதனிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு 2021ல் வாங்கினேன். (அதற்கான பில் இதோ என பில்லை காட்டினார்)
அப்போது தமிழக அமைச்சர்கள் சிலரது சொத்து பட்டியலையும் வெளியிட்டார். இது குறித்து சிபிஐயில் புகார் அளிக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.