திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர். அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இலக்கியாவுக்கு 31 வயதாகிறது.. இந்நிலையில், வெங்கடேசுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்வேறு இடங்களுக்கு சென்றதுடன், திருப்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் இலக்கியாவுக்கு தெரிந்துவிட்டது. எனவே, அந்த பெண்ணை பற்றி கணவரிடம் கேட்கவும், இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.
இதன்காரணமாக கோபித்துக் கொண்டு, சிறுகனூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு இலக்கியா சென்றுவிட்டார்.. கடந்த சில மாதங்களாகவே, அம்மா வீட்டிலேயே தங்கியிருந்தார் இலக்கியா. சம்பவத்தன்று கடைக்கு போய்விட்டு வருவதாக கூறி சென்றவர், கடைசிவரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் பதறிப்போன பெற்றோர், பல்வேறு இடங்களில் மகளை தேடினார்கள். இறுதியில், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே வாய்க்காலில் இலக்கியாவின் பிணம் கிடப்பதை கண்டு அலறினார்கள். அவரது உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன. இதையடுத்து தகவலறிந்து வந்த சிறுகனூர் போலீசார், இலக்கியாவின் சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. இலக்கியாவின் உடம்பில் அளவுக்கு அதிகமான ரத்த காயங்கள் இருந்ததால், அவரது கணவர் வெங்கடேஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுதான் மொத்த உண்மையையும் வெங்கடேஷ் வாக்குமூலமாக சொன்னார்.. “எனக்கு இன்ஸ்டாவில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இலக்கியா என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் என்னிடம் செல்போனில் இதை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார். சமாதானம்: பொங்கல் பண்டிகைக்கு, மாமியார் வீட்டுக்கு சென்ற நான், இலக்கியாவை சமாதானம் செய்தேன், நாம் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று கூறி அழைத்தேன். ஆனால், இலக்கியா வரவில்லை, அவரளது பெற்றோரும் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால்தான், இலக்கியாவை கொலை செய்ய முடிவு செய்தேன். இவர் சம்பவத்தன்று, செல்போனில் இலக்கிய பேசியபோது, உன் அம்மா வீட்டிற்கு நான் மாட்டேன், தனியாக வா, பேசணும்” எனறு சொல்லி அழைத்தேன். சிறுகனூர் அருகே உள்ள வாய்க்காலில் உட்கார்ந்து இலக்கியாவுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.