சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும். இவ்வாறு ஆர்.கே.சவுத்ரி கூறியிருந்தார். அவரது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ள காங்கிரஸ், செங்கோலை அகற்றுவது தொடர்பான சவுத்ரியின் கருத்தை ஆதரித்துள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் செங்கோலை அகற்றும்படி வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.