பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று லாரியில் புயல் நிவாரண பொருட்கள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா இன்று காலை இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.