ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதான், சாயாதேவி, முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மிரட்டலான மீசையுடன் சண்டியராக அருள்நிதி நடித்துள்ளார். மூர்க்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.
தற்போது தயாரிப்பு பணியில் உள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகிறது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுமரங்களை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.. அருள்நிதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று கவனம் பெற்றுள்ளது.