அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர். அங்கு காவிரி கடம்பன் துறையில் மூழ்கிய நபரை எப்படி மீட்பது, முதல் உதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறையுடன் ஒத்திகை பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் தீயணைப்பு வீர்ர்களும் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும்
காவிரியில் மூழ்கிய நபரை எவ்வாறு காப்பாற்றுவது, படகு சவாரியில் பாதுகாப்பு உறை கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தனர்.
ஆற்றில் கவிழ்ந்த படகில் இருந்தவர்களை மோட்டார் படகு மூலம் சென்று மீட்ட ஒத்திகையிலும் ஈடுபட்டனர். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒத்திகையும் நடத்தி காட்டினர்.
இந்நிகழ்வில் தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் கோமதி, முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், குளித்தலை காவல் ஆய்வாளர் உதயக்குமார் மற்றும் பொது சுகாதார துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.