திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் சென்னை பைபாஸ் ரோட்டில் வாலிபர்கள் சிலர் டூவீலரில் அதி வேகம், வீலீங் ஆகியவற்றை செய்து அதனை நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பைபாஸ் ரோட்டில் இது போன்று சாகசம் என்கிற பேரில் அலப்பறை செய்து ரீல்ஸ் போடக்கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி எஸ்பி வருண்குமார் அலப்பறை ஆட்களை அவ்வப்போது பொறி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பைபாஸ் ரோடு என கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி
மாணவிகள் அதிகம் நடந்து செல்லும் பகுதிகளில் டூவீலரில் வேகமாக அவர்கள் மீது மோதுவது போல் போய் பின்னர் கட் அடித்து செல்லும் வாலிபர் ஒருவர் குறித்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு தெரியவந்தது. அந்த வாலிபர் பல நேரங்களில் தனது டூவீலரின் நம்பர் பிளேட்டை கழட்டி வைத்து அலப்பறை செய்வதை தெரிந்து கொண்ட எஸ்பி, தொடர்ந்து கண்காணிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் நேற்றைய தினம் டூவீலர் அலப்பறை பார்ட்டியான திருச்சி புத்தூர் மூலக்கொல்லைத் தெருவைச் சேர்ந்த சீனிரியாஸ் (24) என்ற வாலிபரை அமுக்கினர்.