பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரிடம் பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்த திருச்சி சைபர் க்ரைம் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டில்லியில் கைது செய்த போலீசார் அவரை இன்று திருச்சிக்கு அழைத்து வந்தனர். பெலிக்ஸ் ஜெரால்டு மீது பெண்களை இழிவு படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டு இன்று மதியம் திருச்சி மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி ஜெயசுதா உத்தரவிட்டார்.