இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரும், அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அலுவல் சார் தலைவருமாகிய ரமண சரஸ்வதி தலைமையில் உலக ரெட் கிராஸ் தினம் ரெட் கிராஸ் நிறுவனரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து, அரியலூர் நகராட்சியில் உள்ள 50 துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதார நிவாரண பொருட்கள் வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு RDO ராமகிருஷ்ணன், நகராட்சி சேர்மன் சாந்தி கலைவாணன், நகராட்சி ஆணையர் பொறுப்பு தமிழ் ரெட் கிராஸ் மாவட்ட அலுவல் சார் துணைத் தலைவர் பாலமுரளி, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் கண்ணன், மாவட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர்கள் துரை செல்வராஜ், SMS. சந்திரசேகர், பொருளர் எழில், மேனாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவமூர்த்தி, வேலுமணி, கருப்பையன், மங்கல்ராஜ், நமச்சிவாயம், செல்வி. பத்மா, ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சுகாதார நிவாரண பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெட் கிராஸ் செயலர் பேராசிரியர் ஸ்டீபன் செய்து இருந்தார்.