வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயல் சின்னமாக மாறும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 15 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று தஞ்சை வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒட்டி உள்ள கடலோர பகுதிகளில் கடந்த கஜா புயலின்போது பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 21 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கெலக்டர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் பேட்டி அளித்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டட பகுதிகளுக்கு சென்று இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கும். அங்கு உள்ள சூழ்நிலைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள் பணி என்றனர்.