கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.