கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சமரசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இப்பேரணி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறைவடைந்தது.
துண்டு பிரசுரங்களில் வழக்கு தொடுத்தவர்களுக்கும், வழக்காடுனருக்கும் வெற்றி என்ற உணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், இருவரும் சமரசம் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற கருத்தை பொதுமக்களிடம் விளக்கும் நோக்கிலும், இந்தத் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது, மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு இறுதியானது போன்ற விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.