உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் முதலமைச்சர், துணை முதல்வர், மற்றும் குகேஷ் படங்கள் இடம் பெற்றிருந்தது. நாளை தமிழக அரசு சார்பில் குகேஷ்க்கு பாராட்டு விழா நடக்கிறது.
வரவேற்பு முடிந்ததும் குகேஷ் நிருபர்களிடம் கூறும்போது, சிறு வயதில் இருந்தே செஸ் விளையாட்டை விரும்பி மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 14 சுற்றுகளையும் சவாலாக நினைத்து விளையாடினேன். அனைத்து சூழல்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் உதவியாக இருந்தனர்.வெற்றி பெற்ற தருணம் உணர்ச்சி பூர்ச்சி பூர்வமாக இருந்தது. திட்டம் சரியாக இருந்தால் வெற்றி பெறலாம்’ என்றார்.”