இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை இரவு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. 25ம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி இன்று கோவை காளப்பட்டி சுகுணா ஆடிட்டோரியத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அவர் பேசியதாவது:
இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்ற பின் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்க கூட்டம் நடைபெறுகின்றது நாளை இரவு உதயநிதி ஸ்டாலின் கோவை வருகின்றார்.
ஞாயிற்று கிழமை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு , ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணி, கொடிசியா மைதானம் செல்லும் இடத்தில் அரசின் திட்டங்களை துவங்கி வைத்தும், புதிய நிகழ்வுகளுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கின்றார்.
கோவை மாவட்டத்தில் 10 லட்சம் திமுக உறுப்பினர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்
கோவைக்கு 20 லாரி லோடு காலண்டர் வருது. அதற்கேற்றோர் போல் அவற்றை பிரித்து விரும்புபவர்களின் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்டிசம்பர் 30 ம் தேதிக்குள் விரும்புபவர்கள் வீடுகளுக்கு காலண்டரை கொடுக்க வேண்டும்
பொங்கலுக்குள் கொடுக்கலாம் என்று நினைத்தால் வேறு காலண்டரை மாட்டி விடுவார்கள். திமுக காலண்டரை டிசம்பர் இறுதிக்குள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதன் முதலாக கோவை மாவட்டத்துக்கு வருகை தருவதால், இதுவரை கோவை கண்டிராத அளவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அனைத்து அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.