வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை. மாற்றமின்றி 6.5 விழுக்காடாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ எனப்படுகிறது. ரிசர்வ் வங்கி முடிவால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.6% ஆக இருக்கிறது. இரண்டு மாதங்களில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.1% ஆகக் குறைந்துள்ளது என்றார்.