கரூர் நகர பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பட்டூர் பகுதியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மூக்கையா என்பவரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாவட்டம் காணியாயம்பட்டி பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்.
இதேபோல் கரூர் – ஈரோடு சாலையில் உள்ள அர்ச்சனா நகரில் உள்ள ரமேஷ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ஆவணங்களை எடுத்து வந்து கனியாளம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.