தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். 39 வயதான இவரை டிகே என அழைப்பார்கள். கடந்த 2004ல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் ஆடிவந்தார். கடைசியாக பெங்களூரு ஆர்சிபி அணியில் ஆடிவந்தார். இக்கட்டான காலகட்டத்தில் சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வதில் வல்லவர்.
கடந்த பிறந்ததினத்தின்போது, அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்த நி்லையில் அவரை ஆர்சிபி அணி விடவில்லை. அவரை அணியின் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆக்கி உள்ளது ஆர்சிபி.
இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் ஆர்சிபி-க்கு திரும்புகிறார். அவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிறார். கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம்.ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு முழு அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி! என தெரிவித்துள்ளது.