மகாராஷ்டிரா மாநிலம், காரக்பூர் ரெயில்வே ஸ்டேஷனில், ரயில் வந்த உடன் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிடிஆர் சுஜன் சிங் சர்தார் தனது சக டிடிஆருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பி ஒன்று அவர் மீது விழுந்து எரிகிறது. இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓடுகின்றனர். அதன் பின்னர் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் சென்றதன் பேரில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சுஜன் சிங் சர்தார் உடனடியாக ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.
இது குறித்து கோட்ட மேலாளர் ராஜேஷ்குமார் கூறும்போது…. இரு கம்பிகள் உரசி, ஒன்று அறுந்து விழுந்ததில் சுஜன் சிங் சர்தார் என்ற டிடிஆர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. ஆனாலும் உடனடி நடவடிக்கையினால் அவர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாலை நேரத்திற்கு பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தொிவித்துள்ளது நிம்மதியை தந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.