கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மழை ரயில் இயக்கப்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிதீவிர கனமழையும் பெய்து வருகிறது. வழக்கமாக ரயில் புறப்படும் முன்பு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று தண்டவாளத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 7.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லார் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பெரிய பாரங்கற்கள் விழுந்திருப்பதை கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார் இதனைத் தொடர்ந்து மீண்டும் ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது இதனை அடித்து பயணிகளுக்கும் பயணச்சீட்டு தொகையை ரயில்வே நிறுவனத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாடகை வாகனங்களில் தங்களது குடும்பத்தினருடன் உதகை நோக்கி மீண்டும் சென்றனர். மலை ரயில் போக்குவரத்து பாதியில் ரத்து செய்யப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.