மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவினை பெரம்பலூர் எம்பி அருண்நேரு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் இந்த முக்கியமான திட்டத்தின் நிதி சாத்தியம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
