சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த அருண் (29) என்பவர் பயணம் செய்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய லேப்டாப் பையை மறந்து வைத்து விட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து தன்னுடைய லேப்டாப் பையை தவறவிட்டது தொடர்பாக அருண், கும்பகோணம் ரயில் நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார், தஞ்சாவூர் ரயில்வே புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ொதடர்ந்து தஞ்சாவூருக்கு உழவன் ரயிலில் அருண் பயணம் செய்த பெட்டிக்குச் சென்ற ரயில்வே புறக்காவல் ோலீசார் அங்கிருந்த லேப்டாப் பையை எடுத்து அருணை தஞ்சாவூருக்கு வரவழைத்து வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட அருண் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.